search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கொள்ளை கைது"

    வியாசர்பாடியில் நகை கடையில் கொள்ளையடிக்க முயன்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி சாலையில் நகை நடத்தி வருபவர் மாங்கிலால்.

    இவரது நகை கடைக்கு இன்று பகலில் முதியவர் உள்பட 3 பேர் நகை வாங்க வந்தனர். கடை ஊழியர்களிடம் நகைகளை எடுத்து காட்டும் கூறினர். அவர்கள் காட்டினார்கள்.

    அப்போது ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் அமைந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் உஷார் அடைந்த நகை கடை ஊழியர்கள் 3 பேரையும் பிடித்தனர்.

    இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடந்த வாரம் நடந்த நகை கொள்ளையில் இந்த 3 பேரும் ஈடுபட்டது வீடியோ மூலம் தெரிய வந்தது.

    இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருந்தனர். இதற்கிடையில் 3 பேரில் 2 பேர் நகை கடை ஊழியர்களை தாக்கி விட்டு தப்பி ஓடினர். முதியவர் மட்டும் சிக்கினார். அவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்.

    இந்த கும்பல் கொளத்தூர் மற்றும் வியாசர்பாடி பகுதியில் உள்ள நகை கடைகளில் நகை வாங்குவது போல கைவரிசை காட்டி கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

    ×